இரண்டாவது தடவையாக ஈரான் குரங்கை ஒன்றை அனுப்பி வைப்பு
ஈரான் இரண்டாவது தடவையாகவும் குரங்கு ஒன்றை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்தின் ஓர் அங்கமாகவே இரான் இந்தக் குரங்கை அனுப்பி வைத்துள்ளது.
ஃபர்ஹாம் என்று பெயரிடப்பட்ட குரங்கு, விண்வெளிக்குச் சென்று முழுமையான உடல்நலத்துடன் மீண்டும் திரும்பியிருப்பதாக இரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி கூறியுள்ளார்.
இரான் இந்த திரவநிலை எரிபொருள் ராக்கெட் தொழிநுட்பத்தை முதற்தடவையாக பயன்படுத்தியுள்ளது.
இரானின் விண்வெளித் திட்டம் மேற்குலக நாடுகள் மத்தியில் கவலைகளை அதிகரித்துள்ளது.
இரான் இந்தத் தொழிநுட்பத்தை ஏவுகணை தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தக் கூடுமென்று அந்த நாடுகள் அஞ்சுகின்றன.
BBC-
0 comments
Write Down Your Responses